கவின் நடிக்கும் "பிளடி பெக்கர்" படத்தின் டிரெய்லர் அப்டேட்

நெல்சன் தயாரிப்பில் கவின் கதாநாயகனாக நடிக்கும் 'பிளடி பெக்கர்' படத்தின் டிரெய்லர் குறித்த அப்பேட் வெளியாகி உள்ளது.
கவின் நடிக்கும் "பிளடி பெக்கர்" படத்தின் டிரெய்லர் அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.

நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்குகிறார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கவின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 'பிளடி பெக்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது . இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கவின் பிச்சைக்காரன் கெட் அப்பில் நடித்துள்ளார். நெல்சனின் படங்களைப் போலவே இப்படமும் டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 'பிளடி பெக்கர்' படம் வரும் 31 ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில், இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com