நானி படத்தில் கயாது லோகருக்கு இந்த கதாபாத்திரமா?


Kayadu Lohar joins Nanis The Paradise
x
தினத்தந்தி 18 July 2025 4:59 PM IST (Updated: 18 July 2025 5:01 PM IST)
t-max-icont-min-icon

கயாது லோகர், தெலுங்கு சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

சென்னை,

''டிராகன்'' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த கயாது லோகர், தொடர்ந்து ''இதயம் முரளி'' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும், ''இம்மார்ட்டல்'' படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகவும் மலையாள படமொன்றில் டொவினோ தாமஷுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கயாது தெலுங்கு சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . அதன்படி, 'தசரா' இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கும் "தி பாரடைஸ்" படத்தில் நானிக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் இன்னும் அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கயாது அப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நானியின் 33-வது படமான 'தி பாரடைஸ்' திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி வெளியாக உள்ளது. கயாது இதற்கு முன்பு தெலுங்கில் "அல்லுரி"ல் நடித்திருந்தார். ஆனால், அப்படம் வரவேற்பை பெற தவறிவிட்டது.


1 More update

Next Story