டிரோல் செய்யப்பட்டாலும் தொடர்ந்து வைரலாகும் ஸ்ரீலீலா பட பாடல்


Ketika Sharma’s item song goes viral despite trolling
x

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட்.

சென்னை,

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'ஒன் மோர் டைம்' மற்றும் 2-வது பாடலான 'வாட்டெவர் யூ கோ' சமீபத்தில் வெளியாகி வைரலாகின.

இதனைத்தொடர்ந்து, இப்படத்தின் 3-வது பாடலான 'அதிதா சர்ப்ரைஸ்' என்ற பாடல் கடந்த 10-ம் தேதி வெளியானது. இந்த சிறப்பு பாடலுக்கு பிரபல நடிகை கெட்டிகா ஷர்மா கவர்ச்சி நடனமாடியிருந்தார். இந்த பாடலில் அவரது நடனம் மிகவும் டிரோல் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.


Next Story