ஸ்ரீலீலா படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய கெட்டிகா ஷர்மா


ketika sharmas special song in sreeleelas robinhood
x

இப்பாடல் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'ஒன் மோர் டைம்' மற்றும் 2-வது பாடலான 'வாட்டெவர் யூ கோ' சமீபத்தில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், இப்படத்தின் 3-வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அதிதா சர்ப்ரைஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சிறப்பு பாடலுக்கு பிரபல நடிகை கெட்டிகா ஷர்மா நடனமாடியுள்ளார்.

1 More update

Next Story