கேஜிஎப் பட நடிகர் ஹரிஷ் ராய் காலமானார்

தைராய்டு புற்றுநோயால் பாதிக்கபட்டிருந்த நடிகர் ஹரிஷ் ராய் இன்று காலமானார்
கேஜிஎப் பட நடிகர் ஹரிஷ் ராய் காலமானார்
Published on

கேஜிஎப் திரைப்படத்தில் ஹரிஷ் ராய் நடித்த ஒரு முக்கிய பாத்திரத்தின் பெயர் சச்சா. கன்னட நடிகரான இவர் உபேந்திரா இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ஓம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

கேஜிஎப் திரைப்படத்தில் நடிக்கும் போது, ஹரிஷ் ராய்க்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இவர் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கபட்டிருந்தார்.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் இல்லாததால், பெங்களூருவில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் அவருக்கு நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் கீமோதெரபி சிகிச்சையையும் தொடர்ந்து செய்துகொண்டார். ஹரிஷுக்கு புதிய சிகிச்சை முறைகள் சிலவற்றை மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், அந்த சிகிச்சைக்கான செலவும் அதிகம் என்றாலும் தொடர்ந்து செய்து வந்தார். ஒரு மாதத்திற்கு மட்டும் இந்த சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய் செலவு செய்து வருவதாக தெரிவித்திருந்தார்.

சமீபத்தில், கோபி கவுத்ரு, உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகரை சந்தித்து, ஹரிஷ் ராய் நிதி உதவி கேட்டு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்த காணொளியை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார். உடல்நிலை மேம்பட்டால் மீண்டும் நடிப்புக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்த அவர், தனது சிகிச்சைக்கான பெரும் செலவை வெளிப்படுத்தினார்.ஒரு ஊசிக்கு மட்டும் ரூ.3 லட்சம் செலவாகும் என்று ராய் கூறியிருந்தார்.

தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com