'கேம் சேஞ்சர்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் நாளை வெளியாவதையொட்டி படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
'கேம் சேஞ்சர்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.

முன்னதாக, இந்த படத்தை டிசம்பர் 20-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. பின்னர் 'கேம் சேஞ்சர்' படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ந்தேதி திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்தது.

'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்தது. பான் இந்தியா படம் என்பதால் லக்னோவில் வைத்து படத்தின் டீசர் வெளியீட்டை நாளை பிரம்மாண்டமான முறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில், நடிகை கியாரா அத்வானியின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் அடுத்தாண்டு ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது.

'கேம் சேஞ்சர்' படத்தை தொடர்ந்து ராம் சரண் தனது 16-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் புச்சி பாபு இயக்குகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com