'வார் 2' படத்தில் கியாராவின் பிகினி காட்சிகள் நீக்கம்


வார் 2 படத்தில் கியாராவின் பிகினி காட்சிகள் நீக்கம்
x

வார் 2 படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.

மும்பை,

பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்பை ஆக்சன் திரில்லர் படங்களில் ஒன்றான ''வார் 2'', ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழ் , இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகளவில் வெளியாக உள்ளது. அயன் முகர்ஜி இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஆவான் ஜாவன் என்ற பாடலை வெளியானது. அதில் நடிகை கியாரா அத்வானி பிகினி உடையில் தோன்றியிருப்பார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.

இதற்கிடையில், மத்திய தணிக்கை வாரியம் ஆபாசமான காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என வழியுறுத்தியிருந்த நிலையில், ஆவான் ஜாவன் பாடலில் இருந்து கியாரா நடித்துள்ள 9 வினாடி கவர்ச்சிகரமான பிகினி காட்சிகள் நீக்கபட்டுள்ளன. அதனைதொடர்ந்து தணிக்கை குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. பிகினி காட்சிகளை நீக்கியதால் கியாரா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

1 More update

Next Story