'கிங்டம்' - விஜய் தேவரகொண்டாவின் சகோதரராக நடிக்கும் பிரபல நடிகர்?

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'கிங்டம்' படத்தை கவுதம் தின்னனுரி இயக்குகிறார்.
ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக 'பேமிலி ஸ்டார்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'கிங்டம்' எனபொபெயரிடப்பட்டுள்ளது. கவுதம் தின்னனுரி இயக்கும் இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் சத்யதேவ் இப்படத்தில் விஜய்தேவர்கொண்டாவின் சகோதரராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story






