சிவகார்த்திகேயனுடன் தோல்வி...சிம்புவுடன் பிளாக்பஸ்டர்...யார் இந்த நடிகை தெரியுமா?


know this actress who acted 3 Tamil movies one Blockbuster hit she is kalyani priyadarshan
x
தினத்தந்தி 23 Aug 2025 4:55 PM IST (Updated: 23 Aug 2025 5:17 PM IST)
t-max-icont-min-icon

தமிழில் இந்த நடிகை 3 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

சென்னை,

ஓரிரு படங்களிலேயே திரையுலகில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற பல நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அழகு மற்றும் நடிப்பால் திரையுலகத்தையே மயக்கிப் போட்டுள்ளனர்.

தற்போது அப்படி ஒரு நடிகையைப் பற்றிதான் பார்க்க உள்ளோம். தமிழில் இந்த நடிகை மூன்று படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அவற்றில் ஒன்று பிளாக்பஸ்டர் ஹிட்.

தற்போது இந்த நடிகை நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்க வந்திருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?. அது வேறு யாரும் இல்லை கல்யாணி பிரியதர்ஷன்தான் .

தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் கல்யாணி . தமிழ் திரையுலகில் ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் கல்யாணி தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இவர், அடுத்ததாக ''புத்தம் புது காலை'' படத்தில் நடித்தார். இப்படம் ஹிட் ஆனது. அடுத்ததாக சிம்புவுடன் ''மாநாடு''( 2021) படத்தில் நடித்திருந்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ரவிமோகனுடன் ''ஜீனி'' படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தொடர்ந்து, கார்த்தியுடன் ''மார்ஷல்'' படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பகத் பாசிலுடன் ' ஓடும் குதிரை சாடும் குதிரை' மற்றும் நஸ்லெனுடன் ''லோகா'' ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில், ''லோகா'' படம் வருகிற 28-ம் தேதியும் ' ஓடும் குதிரை சாடும் குதிரை' படம் 29ம் தேதியும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story