தொடர்ச்சியாக 3 தமிழ் படங்கள் வெளியாவது குறித்து மனம் திறந்த கீர்த்தி ஷெட்டி

வா வாத்தியார் படம் வருகிற 12-ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் வருகிற 18-ம் தேதி வெளியாகிறது.
அதனை தொடர்ந்து கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’, ரவி மோகனுடன் ‘ஜீனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், வா வாத்தியார் படம் வருகிற 12-ம் தேதி வெளியாகிறது. அதுமட்டுமில்லாமல், ஜீனி படமும் டிசம்பர் மாதத்தை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய கீர்த்தி ஷெட்டி, "எனது முதல் மூன்று நேரடி தமிழ் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் என்று நான் நினைக்கவே இல்லை. பிரபஞ்சம் அதை சாத்தியமாக்கி இருக்கிறது என்று நினைக்கிறேன். மூன்றும் மிகவும் வேறுபட்டவை’ என்று கூறினார்.
Related Tags :
Next Story






