மொழி முக்கியமல்ல, நடிக்கும் கதாபாத்திரங்களே முக்கியம்- நடிகை பிரியாமணி


மொழி முக்கியமல்ல, நடிக்கும் கதாபாத்திரங்களே முக்கியம்- நடிகை பிரியாமணி
x
தினத்தந்தி 30 Oct 2025 3:45 AM IST (Updated: 30 Oct 2025 3:45 AM IST)
t-max-icont-min-icon

நடிகை பிரியாமணி பான் இந்தியா படங்கள் குறித்து பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னணி நடிகையான பிரியாமணி தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ‘பருத்திவீரன்' படத்தில் சிறந்த நடிப்புக்காக தேசிய மற்றும் மாநில அரசின் விருதுகளை பெற்றார். தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரியாமணி, பான் இந்தியா படங்கள் குறித்து பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ‘‘அவர் ‘பான் இந்தியா' என்ற சொல்லைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள். அப்படி இருக்கும்போது எதற்காக அந்த வார்த்தை? இந்தி நடிகர் தென்னிந்திய படங்களில் நடித்தால் அவரை தென்னிந்திய நடிகர் என்று சொல்கிறோமா? ரஜினி, கமல், தனுஷ் போன்றவர்கள் பல மொழிகளில் நடிக்கிறார்கள். அவர்களை யாருமே பான் இந்தியா நடிகர்கள் என்று சொல்லவில்லையே. மொழி முக்கியமல்ல, நடிக்கும் கதாபாத்திரங்களே முக்கியம். ‘பான் இந்தியா’ என்ற வார்த்தையை தயவுசெய்து சொல்லாதீர்கள்'', என்றார்.

1 More update

Next Story