அகிலுடன் இணைந்த ஸ்ரீலீலா - 'லெனின்' பட கிளிம்ப்ஸ் வெளியீடு


LENIN – Title Glimpse OUT NOW
x

இப்படத்தின் டைட்டில் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது

ஐதராபாத்,

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'ஏஜெண்ட்'. ராமபிரம்மம் சுங்கரா தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படத்தின் டைட்டில் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு 'லெலின்' என பெயரிடப்படுள்ளது. இதில் அகிலுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.

முரளி கிஷோர் இயக்கும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. தமன் இசையமைக்கிறார்.

1 More update

Next Story