முதல் நாளை விட 2வது நாளில் அதிக வசூல் செய்த ''லிட்டில் ஹார்ட்ஸ்''

''லிட்டில் ஹார்ட்ஸ்'' படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
சென்னை,
மவுலி தனுஜ் பிரசாந்த் மற்றும் ஷிவானி நகரம் நடித்த ''லிட்டில் ஹார்ட்ஸ்'' படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
சாய் மார்த்தாண்டி இயக்குனராக அறிமுகமான இப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, முதல் நாளில் ரூ. 1.35 கோடி வசூலித்தது. இரண்டாவது நாளில் அதைவிட அதிகமான வசூலைப் பெற்றிருக்கிறது. 2-வது நாளில் இப்படம் சுமார் ரூ.2.50 கோடி வசூலித்துள்ளது.
அதன்படி, இரண்டு நாட்களில் இப்படம் சுமார் ரூ. 3.85 கோடி வசூலித்திருக்கிறது. இப்படத்தில் ஜெய் கிருஷ்ணா, நிகில் அப்பூரி, ராஜீவ் கனகலா, எஸ்எஸ் காஞ்சி, அனிதா சவுத்ரி மற்றும் சத்ய கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிஞ்சித் யர்ரமில்லி இசையமைத்துள்ள இப்படத்தை ஆதித்யா ஹாசன் தயாரித்துள்ளார்.
Related Tags :
Next Story






