2 படங்களில் நடிக்கும் கவுரி பிரியா...வெளியான போஸ்டர்கள் - வைரல்

"சென்னை லவ் ஸ்டோரி" படத்தில் கிரண் அப்பாவரத்துக்கு ஜோடியாக கவுரி பிரியா நடிக்கிறார்.
சென்னை,
“லவ்வர்” படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஸ்ரீ கவுரி பிரியா, இப்போது இரண்டு தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கிறார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அந்த இரு படங்களின் குழுவினரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து சிறப்பு போஸ்ட்ரகளை வெளியிட்டனர்.
முதலில் , "சென்னை லவ் ஸ்டோரி" படத்தில் கிரண் அப்பாவரத்துக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். "கேராம்ப்" படத்தின் வெற்றிக்கு பின்னர் கிரண் அப்பாவரம் நடிக்கும் படம் இது என்பதால், இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
அடுத்ததாக சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் விசாவில் கவுரி பிரியா நடிக்கிறார். அதில் அவர் ராகுல் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
Related Tags :
Next Story






