சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில்...மோசமான அனுபவத்தை பற்றி மனம் திறந்த மதல்சா சர்மா

நடிகை மதல்சா சர்மா, காஸ்டிங் கவுச் அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்.
சென்னை,
இந்தி தொலைக்காட்சியில் பிரபலமான முகங்களில் ஒருவரான மதல்சா சர்மா, காஸ்டிங் கவுச் பற்றி மனம் திறந்து பேசினார்.
தெலுங்கு சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2009 ஆம் ஆண்டு வெளியான "பிட்டிங் மாஸ்டர்" மூலம் அறிமுகமானார். தமிழில் தம்பிக்கு இந்த ஊரு (2010), காதலுக்கு மரணமில்லை (2011), மற்றும் பத்தாயிரம் கோடி (2013) ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், மதல்சா சர்மா காஸ்டிங் கவுச் அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் சில விரும்பத்தகாத சூழ்நிலைகளை எதிர்கொண்டதாகவும், அவற்றைக் கையாள்வது கடினமாக இருந்ததாகவும், இறுதியில் அந்தப் பாதையில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






