ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவான ‘மகாபாரதம்’

‘மகாபாரதம் ஒரு தர்மயுத்தம்’ என்ற பெயரில் இணையதளத்தில் ஏ.ஐ. தொழில்நுட்ப தொடர் வெளியாகி உள்ளது.
representation image (Grok AI)
representation image (Grok AI)
Published on

மகாபாரத காவியத்தின் புதிய தழுவலாக மகாபாரதம் ஒரு தர்மயுத்தம் என்ற பெயரில் இணையதளத்தில் ஏ.ஐ. தொழில்நுட்ப தொடர் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இந்த காட்சிகள், பார்வையாளர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து ஆர்வத்தையும், விமர்சனத்தையும் தூண்டியுள்ளது.

சமீபத்தில் வெளியாகி உள்ள முதல் பாகம், பீஷ்மர் பிறப்பை மையமாக கொண்டுள்ளது. பிரபல ஓ.டி.டி. தளம் ஒன்றில் வெளியான இந்த தொடரில் பிழை இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கங்காவும் அவரது குழந்தையும் ஒரு அரச அறைக்குள் இடம்பெறும் ஒரு காட்சியில், டிராயர்கள் கொண்ட மேசை மற்றும் நவீன படுக்கை போன்றவை பழமையான காலத்துக்கு பொருத்தமானதாக இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. சில வினாடிகளே தோன்றும் இந்த காட்சியை வைத்து பார்வையாளர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com