100வது நாளில் வெற்றிநடை போடும் “மகாவதார் நரசிம்மா” அனிமேஷன் படம்

‘மகா அவதார் நரசிம்மா’ படம் உலகளவில் இதுவரை ரூ.326 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
100வது நாளில் வெற்றிநடை போடும் “மகாவதார் நரசிம்மா” அனிமேஷன் படம்
Published on

கேஜிஎப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் குறைந்த செலவில் பிரமாண்ட படங்களை தயாரிப்பதில் தனித்துவம் பெற்றது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள மகா அவதார் நரசிம்மா படம் இரண்ய கசிபு என்ற அரக்கன், அவனது மகன் பிரகலாதன், விஷ்ணுவை மையமாக வைத்து புராண திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.

மகா அவதார் நரசிம்மா படம் உலகளவில் இதுவரை ரூ.326 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இப்படம் பாலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, இந்தியில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது 'மகா அவதார் நரசிம்மா' படம். இப்படம் 100 வது நாளில் வெற்றிநடை போட்டுவருகிறது.

இந்தநிலையில் மகா அவதார் நரசிம்மா படம் 100வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனையொட்டி படக்குழு 100வது நாள் போஸ்டரை வெளியிட்டுள்ளது.மேலும் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் நூறாவது நாள் வெற்றியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com