"பைசன்" படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

இந்த படம் சாதியை ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கிவிட்டு எல்லோரும் ஒன்றாக சமமாக வாழ்வோம் என்கிற கருத்தை பேசுகிறது.
சென்னை,
பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன், வாழை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் சாதியை ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கிவிட்டு எல்லோரும் ஒன்றாக சமமாக வாழ்வோம் என்கிற கருத்தை பேசுகிறது.
இந்த நிலையில், பைசன் படத்திலிருந்து மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் நடிகர் துருவ் விக்ரம் தீவிரமாக கபடி பயிற்சிகள் எடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.






