'மங்காத்தா' ரீ ரிலீஸ்- திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்


மங்காத்தா ரீ ரிலீஸ்-  திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
x

15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மங்காத்தா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மங்காத்தா’. அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் என பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றிப்படமாக ‘மங்காத்தா’ அமைந்து இருந்தது.

இப்படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் . திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவைச் சந்தித்த நடிகர் அஜித்துக்கு ‘மங்காத்தா’ படம் பெரும் 'கம்பேக்'காக அமைந்தது. கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் ‘மங்காத்தா’.

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மங்காத்தா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தியேட்டர்களில் படத்தை பார்க்க குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேள தாளங்களுடன் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

1 More update

Next Story