"மே ஐ கம் இன்".. மீண்டு வந்த நடிகர் ஸ்ரீராம் நடராஜன்


மே ஐ கம் இன்.. மீண்டு வந்த நடிகர் ஸ்ரீராம் நடராஜன்
x

நடிகர் ஸ்ரீ "மே ஐ கம் இன்" என்ற ஆங்கில நாவலை எழுதியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

'கனா காணும் காலங்கள்' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ என்ற ஸ்ரீராம் நடராஜன். இவர் 2012-ம் ஆண்டு வெளியான 'வழக்கு எண் 18/9' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, "ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம், இறுகப்பற்று" ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு 'இறுகப் பற்று' படத்திற்கு பிறகு அவர் வேறெந்த படத்திலும் நடிக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தில் அவரின் மெலிந்த உடல் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு அதன் பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்க இயக்குநரும் அவரது நண்பருமான லோகேஷ் கனகராஜ் நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது அவர் குடும்பத்துடன் சேர்ந்து முறையான சிகிச்சை பெற்று மீண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், (may I come in?) "மே ஐ கம் இன்" என்ற நாவலை ஸ்ரீ எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய முதல் ஆங்கில நாவலான "may I come in" ஐ உலகிற்கு பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story