சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் 'பேச்சிலர் ஆந்தம்' பாடல் வெளியீடு


Mazaka: Fun-filled ‘Bachelors Anthem’ song released
x

இவர் தற்போது ’மசாக்கா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் பிரபலம் அடைந்த இவர், தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் , ராயன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது மசாக்கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் ராவ் ரமேஷ், அன்ஷுல், ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

திரிநாத் ராவ் நக்கினா இயக்கி உள்ள இப்படம் அடுத்த மாதம் 21-ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் 'பேச்சிலர் ஆந்தம்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story