பாலிவுட்டில் கதாநாயகியாகும் மீனாட்சி சவுத்ரி?


Meenakshi Chaudhary bags a Bollywood film
x

மீனாட்சி சவுத்ரி ஏற்கனவே ''அப்ஸ்டார்ட்ஸ்'' என்ற இந்தி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

மும்பை,

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது போர்ஸ் படத்தின் 3-வது பாகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். போர்ஸ் 3 படத்தை இயக்க பாவ் துலியாவை அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது. பலரை ஆடிஷன் செய்த பிறகு, ஜான் ஆபிரகாமும் பாவ் துலியாவும் போர்ஸ் 3 படத்தின் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில் மீனாட்சி சவுத்ரி பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகும் படமாக இது இருக்கும். ஏற்கனவே இவர் ''அப்ஸ்டார்ட்ஸ்'' என்ற இந்தி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story