பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி

தில் ராஜூ தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
'கொலை', 'சிங்கப்பூர் சலூன்', 'தி கோட்' போன்ற படங்களில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த 'லக்கி பாஸ்கர்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீனாட்சி சவுத்ரியின் 'மார்க்கெட்' வெகுவாக உயர்ந்துள்ளது.
தற்போது தெலுங்கு படங்களில் மும்முரமாக நடித்து வரும் அவர், பிற மொழிகளிலும் கலக்க ஆயத்தமாகி வருகிறார். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இதற்கிடையில் நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளை தாண்டி பாலிவுட் சினிமாவில் களமிறங்க உள்ளார். அதாவது, பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இதில் கதாநாயகனாக பிரபல பாலிவுட் ஆக்ஷன் நாயகன் டைகர் ஷெரப் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்ஷன் கதையில் உருவாகி வரும் இப்படத்தின் இயக்குனர் உள்ளிட்ட மற்ற விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






