ஆடம்பர வாழ்க்கை, கோடிக்கணக்கான சொத்துகளை விட்டுவிட்டு மலைகளில் வசிக்கும் நடிகை...


Meet Akshay Kumars heroine, who quit Bollywood, became a monk, left her luxury bungalow, now lives in mountains
x
தினத்தந்தி 6 Aug 2025 7:16 PM IST (Updated: 6 Aug 2025 7:18 PM IST)
t-max-icont-min-icon

சினிமா வாழ்க்கை நல்ல நிலையில் இருந்தபோதும், அவர் சினிமா உலகத்திலிருந்து தன்னை தூர விலக்கிக் கொண்டார்.

சென்னை,

திரைப்படத் துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த இவர், ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீட்சித் போன்ற நடிகைகளுக்கு கடுமையான போட்டியை கொடுத்தார். அப்படி சினிமா வாழ்க்கை நல்ல நிலையில் இருந்தபோதும், அவர் சினிமா உலகத்திலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டார்.

ஒரு காலத்தில் சிறந்த கதாநாயகியாக இருந்த இவர், கோடிக்கணக்கான சொத்துக்களையும் ஆடம்பர வாழ்க்கையையும் விட்டுவிட்டு இப்போது மலைகளில் வசிக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

திரைப்படங்களை விட்டுவிட்டு துறவியான அந்த நடிகை பற்றி உங்களுக்குத் தெரியுமா..? அதுதான் பர்கா மதன். 1996-ம் ஆண்டு வெளியான அக்‌சய் குமாரின் 'கிலாடியோம் கா கிலாடி' படத்தின் மூலம் பர்கா மதன் அறிமுகமானார்.

இதில், ரேகா, ரவீனா டாண்டன், இந்தர் குமார், குல்ஷன் குரோவர் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். இருப்பினும், 2003-ல் வெளியான 'பூத்' அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

அதில், அவர் ஒரு பேயாக நடித்தார். அதன் பிறகு, அவருக்கு இந்தியில் பல வாய்ப்புகள் கிடைத்தன. 'தேரா மேரா பியார்' மற்றும் 'சமே: வென் டைம் ஸ்ட்ரைக்ஸ்' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

திரைப்படங்களைத் தவிர, தொலைக்காட்சியில் பல சீரியல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இருப்பினும், கெரியரின் உச்சத்தில் இருந்தபோது அவர் படங்களில் இருந்து விலகினார். 2012-ல் துறவியாக வேண்டும் என்ற தனது முடிவால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஆடம்பரமான வாழ்க்கையை விட்டுவிட்டு, மலைகள் மற்றும் ஆறுகளின் கரையில் தனது வாழ்க்கையை வாழ்கிறார். பர்கா மதன் திரைப்படங்கள் மற்றும் நடிப்பிலிருந்து விலகி இருந்தாலும், இன்னும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

1 More update

Next Story