'பட்டாஸ்' பட நடிகைக்கு ரகசிய திருமணமா...உண்மை என்ன?


Mehreen Pirzada denies secret wedding
x
தினத்தந்தி 17 Dec 2025 3:15 AM IST (Updated: 17 Dec 2025 3:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் இவர் 'பட்டாஸ்' படத்தில் நடித்திருந்தார்.

சென்னை,

தமிழில் தனுஷ் ஜோடியாக 'பட்டாஸ்' மற்றும் 'நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா' படங்களிலும், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ள மெஹ்ரீன் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகி வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டில், மெஹ்ரீன் ஆதம்பூர் எம்.எல்.ஏ குல்தீப் பிஷ்னோயின் மகனும், ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனுமான பவ்யா பிஷ்னோயுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு, இருவரும் திருமணத்தை ரத்து செய்தனர். இதற்கிடையில் மெஹ்ரீன், சிரஞ்சீவ் மக்வானா என்பவரை ஐதராபாத்தில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவின. இதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், தனது திருமணம் குறித்த செய்தியை மெஹ்ரீன் மறுத்துள்ளார். திருமணம் குறித்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் வதந்திகளை நம்பாதீர்கள் எனவும் மெஹ்ரீன் கூறியுள்ளார்.

1 More update

Next Story