ஆண்கள் ஒரு முறையாவது அந்த வலியை அனுபவிக்க வேண்டும் - ராஷ்மிகா மந்தனா


Men should experience that pain at least once - Rashmika Mandanna
x

இந்த வருடம் ராஷ்மிகா நடிப்பில் வெளியான சாவா, குபேரா, தம்மா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின.

சென்னை,

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ஒவ்வொரு படமும் சூப்பர் ஹிட்டாக மாறி வருகிறது. சிக்கந்தர் ஒன்றைத் தவிர இந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான சாவா, குபேரா, தம்மா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின.

இன்று அவரது ஐந்தாவது படமான 'தி கேர்ள் பிரண்ட்’ வெளியாகி இருக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயங்கியுள்ள இந்தப் படத்தின் புரமோஷனில் ராஷ்மிகா மிக தீவிரமாக கலந்துகொண்டார்.

சமீபத்தில், ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ஜெயம்மு நிச்சயயம்முரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ஆண்களுக்கு மாதவிடாய் வந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று ஜெகபதி கேட்டார்.

ராஷ்மிகா அதற்கு ஆம் என்றார். பெண்கள் ஒவ்வொரு மாதமும் அனுபவிக்கும் மாதவிடாய் வலியை ஆண்கள் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டும் என்று ராஷ்மிகா கூறினார். இந்தக் கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன.

1 More update

Next Story