எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் கனவில் இருந்தேனா?- பாக்யராஜ் பரபரப்பு பேச்சு


எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் கனவில் இருந்தேனா?- பாக்யராஜ் பரபரப்பு பேச்சு
x

சென்னையில் நடைபெற்ற ‘ஆறு அறிவு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசினார்.

சென்னை,

ராஜாத்தி தயாரித்து சி.எம்.விஜய் இயக்கத்தில் அம்பேத்கர், மோனிகா, தீபா சங்கர், பசங்க பாண்டி ஆகியோர் நடித்துள்ள ‘ஆறு அறிவு' படம் விரைவில் திரைக்கு வருகிறது.

சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜோ பிரகாஷ் என்பவர் பேசும்போது, ‘‘எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, எல்லா எம்.எல்.ஏ.க்களும் ஒன்றுகூடி பாக்யராஜ் முதல்-அமைச்சராக வேண்டும் என்றார்கள். பாக்யராஜ் ஏற்காததால் தான், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி முதல்-அமைச்சரானார்'' என்று குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து பாக்யராஜ் பேசுகையில், ‘‘ஜோ பிரகாஷ் சொல்வது சரியான தகவல் அல்ல. எம்.ஜி.ஆர். மறைந்து ஒரு வாரத்தில் அடுத்து யார்? என்பது தொடர்பான பேச்சு என்னிடம் வந்தது. ஒரு தரப்பினர் ஆர்.எம்.வீரப்பனுக்கும், இன்னொரு தரப்பினர் ஜெயலலிதாவுக்கும் ஆதரவுக்கரம் சேர்த்தார்கள்.

இப்போது அதுபற்றி முடிவெடுத்தால் கோஷ்டி பிரச்சினையாகும். உடனடியாக ஏதாவது செய்யவேண்டும் என்றால் எம்.ஜி.ஆரின் மனைவியை முதல்-அமைச்சராக்குங்கள். யாரும் பிரச்சினை செய்ய மாட்டார்கள். பின்னர் பொதுக்குழு கூட்டி யார் வேண்டும்? என்று முடிவெடுங்கள் என்றேன். இதுதான் உண்மையில் நடந்தது. மற்றபடி நான் அந்த மாதிரி யோசனையில் இருந்தது இல்லை. தேர்தல் வரும் சமயத்தில் எதையாவது பேசி இழுத்து விடாதீர்கள்'', என்றார். பாக்யராஜின் இந்த பேச்சு விழாவில் கலகலப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story