''மிர்சாபூர் 4'' ... "விரைவில் நல்ல செய்தி" - ஸ்வேதா திரிபாதி


Mirzapur 4 ... Good news soon - Shweta Tripathi
x

'மிர்சாபூர்' சீசன் 3-ல் நடித்த ஸ்வேதா திரிபாதி, அடுத்த சீசனுக்கான அப்டேட்டை ரசிகர்கள் விரைவில் பெறலாம் என்று கூறினார்.

சென்னை,

கடந்த 2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓ.டி.டியில் வெளியான பாலிவுட் வெப் சீரிஸ் 'மிர்சாபூர்' . மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இதில், பங்கஜ் திரிபாதி, அலி பசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார். அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டு இந்த தொடரின் 2-வது சீசனும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இதன் 3-வது சீசன் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இதன் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கும்நிலையில், 'மிர்சாபூர்' வெப் தொடர் திரைப்படமாக உருவாக உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், 'மிர்சாபூர்' சீசன் 3-ல் கஜகாமினி குப்தா (கோலு) வாக நடித்த ஸ்வேதா திரிபாதி, அடுத்த சீசனுக்கான அப்டேட்டை ரசிகர்கள் விரைவில் பெறலாம் என்று கூறினார்.

அவர் கூறுகையில், '' நான்காவது சீசன் மற்றும் மிர்சாபூர் திரைப்படம் ஆகிய இரண்டிற்கான பணிகளும் நடந்து வருகின்றன. கடந்த சீசன் ஜூலை மாதம் என் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்த பிறந்தநாளிலும் உங்கள் அனைவருடனும் சில நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்வோம் என்று நம்புகிறேன்' என்றார்.

1 More update

Next Story