பாக்ஸ் ஆபீஸில் புதிய மைல்கல்லை எட்டிய 'தொடரும்'... நன்றி தெரிவித்த மோகன்லால்

'தொடரும்' படம் கேரள பாக்ஸ் ஆபீஸில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால்தான் என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான எல் 2 எம்புரான் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய வெற்றிபெற்றநிலையில், தற்போது வெளியாகி இருக்கும் 'தொடரும்' படமும் பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்துள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான இப்படம் 16 நாட்களில் உலகளவில் ரூ.200 கோடி வசூலித்து கேரள பாக்ஸ் ஆபீஸில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்நிலையில் நடிகர் மோகன்லால், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில்,
'சில பயணங்களுக்கு கூச்சல் தேவையில்லை, அவற்றை முன்னோக்கி கொண்டு செல்ல இதயங்கள் மட்டுமே தேவை. 'தொடரும்' உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான இதயங்களில் இடம்பிடித்துள்ளது. கேரளாவின் அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் முறியடித்துள்ளது. அனைத்து அன்புக்கும் நன்றி' என்று தெரிவித்திருக்கிறார்.






