'எல் 2 எம்புரான்' - சர்ச்சை காட்சிகள் நீக்கம்


Mohanlal’s Empuraan trimmed after controversy
x
தினத்தந்தி 31 March 2025 7:43 AM IST (Updated: 31 March 2025 8:17 PM IST)
t-max-icont-min-icon

இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் பிரிவினையைத் தூண்டுவதாக சர்ச்சை எழுந்தது.

திருவனந்தபுரம்,

மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' படத்தின் 2-ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த 27-ம் தேதி வெளியானது.

மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை 'எல் 2 எம்புரான்' படைத்திருக்கிறது.

வெற்றிகரமாக வசூலைக் குவித்துவரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் வகுப்புவாத பிரிவினையைத் தூண்டுவதாகவும் சர்ச்சை எழுந்தது. சர்ச்சை விரிவடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவினர் படத்தின் சில காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, 17 சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி, படத்தின் நேரத்தில் 2 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், வில்லனின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திருத்தப்பட்ட காட்சி இன்று முதல் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story