“அகண்டா 2” வரிசையில் அடுத்த படம் - காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட “மௌக்லி 2025”


‘Mowgli 2025’ postponed with no fresh date locked
x

“மௌக்லி 2025” படம் வருகிற 12-ம் தேதி திரையரங்குகளில் வர இருந்தது.

சென்னை,

ரோஷன் கனகலா நடித்த “மௌக்லி 2025” படம் வருகிற 12-ம் தேதி திரையரங்குகளில் வர இருந்தது. ஆனால் “அகண்டா 2” ஒத்திவைக்கப்பட்டதாலும், அந்த படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் “மௌக்லி 2025” பட தயாரிப்பாளர்கள் படத்தை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர்.

“அகண்டா 2” படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பிறகுதான் “மௌக்லி 2025” படத்தின் புதிய ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலர் போட்டோ புகழ், சந்தீப் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இளம் ஹீரோ ரோஷன் கனகலா கதாநாயகனாக நடித்துள்ளார். சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

1 More update

Next Story