சாக்சி மடோல்கரின் ’மௌக்லி' பட டீசரை வெளியிடும் ஜூனியர் என்.டி.ஆர்

இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Mowgli: Jr NTR to launch the teaser of Roshan Kanakala’s next
Published on

சென்னை,

சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடிக்கும் மௌக்லி படத்தின் டீசர் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இந்த படத்தை கலர் போட்டோ புகழ், சந்தீப் ராஜ் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், நாளை ஜூனியர் என்.டி.ஆர் இந்த டீசரை வெளியிடுவார் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர், இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம் ஹீரோ ரோஷன் கனகலா கதாநாயகனாக நடிக்க பண்டி சரோஜ் குமார் வில்லனாகவும், ஹர்ஷா செமுடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com