"மிஸ்டர் பாரத்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது


மிஸ்டர் பாரத் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
x
தினத்தந்தி 20 Dec 2024 8:18 PM IST (Updated: 17 July 2025 9:16 AM IST)
t-max-icont-min-icon

லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனத்தின் சார்பில் "மிஸ்டர் பாரத்" என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்.

சென்னை,

'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் வலம் வருகிறார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171-வது படமான 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். மேலும் கைதி 2 மற்றும் விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார்.

இதற்கிடையில், 'பைட் கிளப்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான லோகேஷ், தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பென்ஸ்' படத்தை தயாரித்து வருகிறார். இந்தநிலையில் லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனத்தின் சார்பில் "மிஸ்டர் பாரத்" என்ற புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் பிரபல யூடியூபர் பாரத் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் நிரஞ்சன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிக்க உள்ளனர். லோகேஷ் புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை புரோமோ வீடியோவுடம் வெளியிட்டார்.

இந்நிலையில் "மிஸ்டர் பாரத்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Related Tags :
Next Story