

நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார்.
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித், "அஜித்குமார் ரேஸிங்" என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கினார். அவரது கார் பந்தய அணி பல நாடுகளில் பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்த நிலையில், ''குட் பேட் அக்லி'' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அஜித் தனது 64-வது படத்தில் நடிக்க உள்ளார். இதனை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படம் குறித்து அஜித்குமார் பேட்டி ஒன்றில் பேசும்போது, "இன்னும் இரண்டு மாதத்தில் ஏகே 64 படத்திற்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளேன். வருகிற ஜனவரி மாதத்திற்குள் இந்த படத்திற்கான அறிவிப்புகள் வெளிவரும். நான் ஒரே நேரத்தில் சினிமாவிலும் கார் பந்தயத்திலும் ஈடுபட்டு வருகிறேன்." என்று பேசியுள்ளார்.
இந்த படம் 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.