‘டிக்கெட்' காசு வீண் போகாதபடி என் நடிப்பு இருக்கும்- நடிகை ஆஷ்னா சவேரி

‘வள்ளுவன்' பட விழாவில் நடிகை ஆஷ்னா சவேரி கலந்து கொண்டு பேசினார்.
சென்னை,
ஆறுபடை புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரித்து சங்கர் சாரதி இயக்கி, சேத்தன் சீனு-ஆஷ்னா சவேரி நடித்துள்ள ‘வள்ளுவன்' படம் விரைவில் திரைக்கு வருகிறது.
சென்னையில் நடந்த படத்தின் இசை-டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆஷ்னா சவேரி பேசும்போது, ‘‘எனக்கு மிகவும் முக்கியமான படம் இது. நிறைய எமோஷனல், திருப்பங்கள் நிறைந்த படம் இது. எனக்கு தேவை ரசிகர்களின் மனம் நிறைந்த ஆதரவு மட்டுமே. என்னை பொறுத்தவரை, கொடுத்த ‘டிக்கெட் காசு வீண் போகல' என்ற மனநிலை ரசிகர்களுக்கு வரவேண்டும். அப்படிப்பட்ட படங்களில் தான் நடித்து வருகிறேன். இதுவும் அப்படிப்பட்ட படம் தான்'' என்றார்.
கோமல் சர்மா பேசுகையில், ‘‘திருக்குறள்கள் மூலமாக உலகத்துக்கு வெளிச்சம் தந்தவர் திருவள்ளுவர். ஒரு மாதத்துக்கு 10 குறள்களைக் குழந்தைகள் படித்து வந்தால், எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாகவும், உணர்வுமிக்க தலைவர்களாகவும் மாறுவார்கள். எனவே பெற்றோர் இதனை ஊக்குவித்து வாருங்கள்'' என்றார்.






