"நான் கோமாளி" வெப் தொடர்: 10 வேடங்களில் ராம் நிஷாந்த்
நடிகர் ராம் நிஷாந்த் "நான் கோமாளி" வெப் தொடரின் புதிய சீசனில் நடித்திருக்கிறார்.
சென்னை,
ஒவ்வொரு துறையிலும் கடினமாக உழைக்க கூடிய சாமானிய மனிதர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டு பிரபல யூடியூப் சேனலில் வெளியான "நான் கோமாளி" என்ற வெப் தொடரில் நடித்தார் நடிகர் ராம் நிஷாந்த்.
இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் ராம் நிஷாந்த் "நான் கோமாளி" வெப் தொடரின் புதிய சீசனில் நடித்திருக்கிறார். இதனை விசாகன் ஜெயகதிர் இயக்கியுள்ளார். இந்த புதிய சீசனில் நடிகர் ராம் நிஷாந்த் 10 வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். பஸ் கண்டக்டர், கேப் டிரைவர், மீனவர், போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 10 விதமான மனிதர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் உருவாக்கப் பட்டிருக்கிறது.
இந்த வெப் தொடரின் டிரெய்லர் கடந்த மே மாதம் 1 ம் தேதி வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில், டிரெய்லரை பார்த்த நடிகர் சமுத்திரக்கனி படக் குழுவினரை பாராட்டியுள்ளார். இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலானது.