'தண்டேல்' படத்தில் நாக சைதன்யாவின் நடிப்பு நம் இதயத்தை உருக்கும் - அல்லு அரவிந்த்


Naga Chaitanya’s performance in Thandel will melt our hearts – Allu Aravind
x

தண்டேல்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

விசாகப்பட்டினம்,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் 'தண்டேல்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், . "தண்டேலில் நாக சைதன்யாவின் நடிப்பு நம் இதயத்தை உருக்கும். இதுவரை கண்டிராத, சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்' என்றார்.

'தண்டேல்' படம் அடுத்த மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story