"நாகபந்தம்"...பார்வதியாக பிரபல நடிகை - வைரலாகும் பர்ஸ்ட் லுக்


Nagabandham: Nabha Natesh’s first look unveiled
x
தினத்தந்தி 16 Jan 2026 5:45 PM IST (Updated: 16 Jan 2026 5:54 PM IST)
t-max-icont-min-icon

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.

சென்னை,

இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று "நாகபந்தம்". மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த மர்மத் திரில்லர் படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார். நபா நடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், நபாவின் பர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அவர் இதில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

அபிஷேக் நாமா இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

1 More update

Next Story