'என்பிகே111'- மீண்டும் இணைந்த நந்தமுரி பாலகிருஷ்ணா, கோபிசந்த் மலினேனி

பாலகிருஷ்ணா தற்போது ''அகண்டா 2'' படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
நந்தமுரி பாலகிருஷ்ணாவும் இயக்குனர் கோபிசந்த் மாலினேனியும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளுக்கு (ஜூன் 10) முன்னதாக, ஆவரது புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 111வது படமான இதற்கு தற்காலிகமாக என்பிகே111 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை விருத்தி சினிமாஸ் பேனரின் கீழ் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். பாலகிருஷ்ணாவும் மலினேனியும் முன்பு "வீர சிம்ஹா ரெட்டி" என்ற அதிரடி படத்தில் இணைந்து பணியற்றி இருந்தனர். பாலகிருஷ்ணா தற்போது ''அகண்டா 2'' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகிறது.
Related Tags :
Next Story






