"மிகவும் இனிமையானவர்" - விக்ரமை புகழ்ந்த நானி

நானி தற்போது ’தி பாரடைஸ்’ படத்தில் நடித்து வருகிறார் .
சென்னை,
நடிகர் நானி, தற்போது பல படங்களில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை குறித்து பேசினார். அப்போது, நானி விக்ரமை ’இனிமையான நபர்’என்று புகழ்ந்தார்.
அவர் பேசுகையில், "சில மாதங்களுக்கு முன்பு, 'ஹாய், நானி சார் உங்களிடம் பேச விரும்புகிறேன்' என்று எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. தற்போது எண்கள் கசிந்து கொண்டிருப்பதால், அது தெரியாத நபராக இருக்கும் என்று நினைத்து நான் அதைப் புறக்கணித்தேன்.
பின்னர், அடுத்த நாளில், 'ஹாய் நானி, நான் விக்ரம். உங்களிடம் பேச விரும்புகிறேன், எப்போது பேசலாம்' என்று மற்றொரு மெசேஜ் வந்தது. அது அவர்தானா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் என் மேனேஜரிடம் கேட்டேன், அவர் ஆம் என்றார். உடனடியாக நான் அவரை அழைத்து பேசினேன். அவர் என்னிடம் 10-15 நிமிடங்கள் பேசினார். என் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். அவர் மிகவும் இனிமையான நபர்’ என்றார்.
கடைசியாக ஹிட் 3 படத்தில் நடித்த நானி , அடுத்து தசரா பட புகழ் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான தி பாரடைஸில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் மோகன் பாபு மற்றும் ராகவ் ஜுயல் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.






