நானியின் "ஹிட் 3" டிரெய்லர் வெளியானது
நானியின் ‘ஹிட் 3’ படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான 'காதல் வெல்லுமா' வெளியாகி வைரலானது.
இந்நிலையில் 'ஹிட் 3' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
'May 1st na meeru, nenu kalisi gelustam ane nammakam undi 'Natural Star @NameisNani at the #HIT3 Trailer launch event #HIT3Trailer out now❤️▶️ https://t.co/ZcpgZKZ7YK#HIT3 in cinemas worldwide on 1st MAY, 2025.#AbkiBaarArjunSarkaarNatural Star @NameisNani… pic.twitter.com/54UTv9VG1G
— Unanimous Productions (@UnanimousProds) April 14, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire






