நானியின் 'தி பாரடைஸ்' கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள 'தி பாரடைஸ்' படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது நடிப்பில் வெளிவந்த 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா', 'தசரா' , 'ஹாய் நான்னா', 'சூர்யாவின் சனிக்கிழமை' ஆகிய திரைப்படங்கள் அமோக வெற்றியைப் பெற்றன.

தற்போது இயக்குனர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் 'ஹிட் 3' படத்தில் நானி நடித்து வருகிறார். சமீபத்தில் நானியின் 33-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்குத் 'தி பாரடைஸ்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் 'தி பாரடைஸ்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com