'நறுவீ' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!


நறுவீ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
x

ஹாரர் திரில்லர் படைப்பாக 'நறுவீ' படம் உருவாகியுள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் சுபா ரக். எம் இயக்கத்தில் சமூக சேவகர் மற்றும் டாக்டரான ஹரிஷ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் நறுவீ. இப்படம் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ளது.

இதில் வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ். ராஜா, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை, ஊட்டி, குன்னூர் ஆகிய இடங்களில் மொத்தம் 60 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.

ஹரிஷ் சினிமாஸ் அழகு பாண்டியன் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 29-ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை பாஸ்கர் சினிமா கம்பெனி மற்றும் சிவானி ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட உள்ளன.

1 More update

Next Story