நயன்தாராவின் பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர் விக்னேஷ் சிவன்

இந்த காரின் விலை சுமார் ரூ.10 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
நயன்தாராவின் பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த கணவர் விக்னேஷ் சிவன்
Published on

சென்னை,

கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஜயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தி வருகிறார். நடிகை, தயாரிப்பாளர் என கலக்கும் நயன்தாரா சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.

இதற்கிடையில், நடிகை நயன்தாரா நேற்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு பிறந்தநாள் பரிசாக விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை கொடுத்துள்ளார். இந்த காரின் விலை சுமார் ரூ.10 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com