ராஷ்மிகா நடித்த "தி கேர்ள் பிரண்ட்" படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு


ராஷ்மிகா நடித்த தி கேர்ள் பிரண்ட் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
x

ராஷ்மிகா நடித்த "தி கேர்ள் பிரண்ட்" படம் வருகிற நவம்பர் 7ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

மிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற பெயரில் புதிய படத்தில் நடித்துள்ளார். ராகுல் ரவீந்திரன் இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தீக்சித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார்.அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற நவம்பர் 7ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகின. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திலிருந்து லாயி லே என்ற புதிய பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை கபிலன் பாடியுள்ளார். பாடல் வரிகளை ராகேந்து மௌலி எழுதியுள்ளார்.

1 More update

Next Story