ராஷ்மிகாவின் "தம்மா" படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

ராஷ்மிகா, ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள ‘தம்மா’ படம் அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ளது.
ராஷ்மிகாவின் "தம்மா" படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
Published on

சென்னை,

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது ஹாரர் படம் பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, அவர் நடிக்கும் முதல் ஹாரர் படத்தை "ஸ்ட்ரீ, முஞ்யா" உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு தம்மா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில், தம்மா படத்திலிருந்து "ரஹெய்ன் நா ரஹெய்ன் ஹம்" என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை சவும்யதீப் சர்க்கார், சச்சின்- ஜிகர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com