துல்கர் சல்மான் நடிக்கும் 'காந்தா' படத்தின் புதிய அப்டேட்!


New update on Dulquer Salmaans Kandha!
x

இப்படத்தில் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஐதராபாத்,

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். அவர் கடைசியாக லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அடுத்ததாக துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைந்து காந்தா என்ற படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இவர் 'தி ஹண்ட் பார் வீரப்பன்' மற்றும் நிலா திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இன்று மாலை 5.04 மணிக்கு துல்கர் சல்மானின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.

1 More update

Next Story