''பஞ்சமி' தைரியமான, புத்திசாலியான பெண் ' - நிதி அகர்வால்


Nidhhi Agerwal talks about her role in Hari Hara Veera Mallu
x

'ஹரி ஹர வீரமல்லு' படத்தில் ‘பஞ்சமி’ என்ற கதாபாத்திரத்தில் நிதி அகர்வால் நடித்துள்ளார்.

சென்னை,

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நிதி அகர்வால். இவர் தெலுங்கில் 'சவ்யசாச்சி' திரைப்படத்திலும், தமிழில் 'ஈஸ்வரன்' திரைப்படத்திலும் அறிமுகமானார்.

ஐஸ்மார்ட் ஷங்கர் மற்றும் கலக தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்போது இவர் பிரபாஸுடன் 'தி ராஜா சாப்' படத்திலும் , பவன் கல்யாணுடன் 'ஹரி ஹர வீரமல்லு' திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'பஞ்சமி' என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

கடந்த மகளிர் தினத்தை முன்னிட்டு, "ஹரி ஹர வீர மல்லு" குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டனர், அதில் நிதி அகர்வால் தனது பஞ்சமி கதாபாத்திரம் குறித்து பேசினார்.

அவர் கூறுகையில், "நான் ஹரி ஹர வீர மல்லுவில் பஞ்சமியாக நடிக்கிறேன். பஞ்சமி வலிமையான, தைரியமான மற்றும் புத்திசாலியான பெண் என்று நான் கூறுவேன். இந்த பாத்திரத்தில் நடித்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது' என்றார்.

1 More update

Next Story