சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்...யார் தெரியுமா?

நிதி அகர்வால் நடித்துள்ள ’தி ராஜாசாப்’ படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாக உள்ளது.
Nidhi Agarwal will be paired opposite a senior hero...do you know who he is?
Published on

சென்னை,

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நிதி அகர்வால். இவர் தெலுங்கில் 'சவ்யசாச்சி' திரைப்படத்திலும், தமிழில் 'ஈஸ்வரன்' திரைப்படத்திலும் அறிமுகமானார்.

ஐஸ்மார்ட் ஷங்கர் மற்றும் கலக தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் பவன் கல்யாணுடன் 'ஹரி ஹர வீரமல்லு' திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது பிரபாஸுடன் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், நிதி அகர்வால் ஒரு சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த ஹீரோ யார் என்று உங்களுக்குத் தெரியுமா?, வேறுயாருமில்லை வெங்கடேஷ்தான்.

தற்போது திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் வெங்கடேஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com