"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" படத்தின் "புள்ள" வீடியோ பாடல் வெளியீடு


தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி உள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாக வைரலாகின. அதில் முதல் பாடலான 'கோல்டன் ஸ்பாரோ' என்ற பாடல் மட்டும் அதிக அளவில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்த 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் இதுவரை 16 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் 'கோல்டன் ஸ்பாரோ' வீடியோ பாடல் வெளியாகி வைரலானது.இந்த பாடல் வரிகளை தனுஷ் எழுத, சுப்லாசினி, ஜிவி பிரகாஷ், அறிவு ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் "புள்ள" வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வரிகளை தனுஷ் எழுத, ஜிவி பிரகாஷ் இந்த பாடலை பாடியுள்ளார்

1 More update

Next Story